வைகை ஆற்றில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழப்பு: அர்ஜுன் சம்பத் நேரில் ஆய்வு

by Staff / 20-05-2023 12:02:28pm
 வைகை ஆற்றில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழப்பு: அர்ஜுன் சம்பத் நேரில் ஆய்வு

மதுரை மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் மூழ்கி ஐந்து பேர் உயிரிழந்தார்கள். இந்த சம்பவம் குறித்து உயிரிழந்த குடும்பத்திற்கு நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என தொடர்ந்து பல்வேறு அமைப்புகள் மாவட்ட நிர்வாகத்துக்கும், தமிழக அரசுக்கும் கோரிக்கை வைத்தன. இந்த நிலையில், இந்து மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் அர்ஜுன் சம்பத் வைகை ஆற்றில் உயிரிழப்பு நடந்த இடத்தினை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதனை தொடர்ந்து மதுரை மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தார்.

 

 

Tags :

Share via

More stories

Logo