குற்றாலம் ஓட்டலில் கெட்டுப்போன 50 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை.

by Editor / 19-07-2023 08:43:50pm
குற்றாலம் ஓட்டலில் கெட்டுப்போன 50 கிலோ உணவுப்பொருட்கள் பறிமுதல் உணவு பாதுகாப்பு அதிகாரி நடவடிக்கை.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது சீசன் உள்ளது. அருவிகளில் மிதமான தண்ணீர் விழுகிறது. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வருகிறார்கள். இந்த நிலையில் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை. ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குற்றாலத்தில் உணவகங்களில் சோதனை நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் இன்று தென்காசி பாவூர்சத்திரம் திப்பனம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் பிரபல உணவகமான நிலா பிரியாணி குற்றாலத்தில் உள்ள பேருந்து நிலையம் மேல்புறம் செயல்பட்டு வரும் நிலா பிரியாணி ஹோட்டலில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் நாகசுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது குளிர்சாதன பெட்டியில் வெட்டி வைக்கப்பட்டிருந்த இறைச்சிகள் மற்றும் நேற்று விற்பனையாகாமல் சாப்பிடுவதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த சிக்கன் பழைய மட்டன் உள்ளிட்டவைகளும் 35 கிலோ சிக்கன் கெட்டு போய் இருந்ததை கண்டுபிடித்தார். மேலும் நூடுல்ஸ் ரைஸ் உள்ளிட்டது 15 கிலோ மேலும் மேலும் சால்னா உள்ளிட்ட பொருட்களும் உள்ளிட்ட மொத்தம் 50 கிலோ உணவு பொருட்கள் கண்டறியப்பட்டுசமைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை அதிகாரி நாக சுப்பிரமணியன் பினாயில் ஊற்றி அழித்தார். பின்னர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் அங்கு இருந்ததை பறிமுதல் செய்தார். மொத்தம் இதற்காக 3 ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. தொடர்ந்து குற்றாலத்தில் இந்த சோதனைகள் நடைபெறும் என்று அவர் தெரிவித்தார்.

 

Tags :

Share via