வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

by Staff / 21-06-2025 10:33:06pm
வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை அதிமுக சட்டமன்ற உறுப்பினரும், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாநிலத் துணைச் செயலாளராருமான அமுல் கந்தசாமி (60) கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால்  சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி  காலமானார். அவருக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமுல் கந்தசாமியின் உடலுக்கு மலர் வளையம் வைத்து நேரில் அஞ்சலி செலுத்தினார். முன்னதாக தனது எக்ஸ் தளத்தில் இரங்கல் தெரிவித்திருந்தார்.

 

 

Tags : வால்பாறை சட்டமன்ற உறுப்பினர் அமுல்கந்தசாமி உடல்நல குறைவால் உயிரிழந்தார்.

Share via