விவசாயிகளுக்கு 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட காங்கிரஸ்
நாட்டு விவசாயிகளுக்கு 5 முக்கிய தேர்தல் அறிக்கைகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. சுவாமிநாதன் கமிஷன் அறிக்கையின்படி, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும். விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்ய நிரந்தர 'விவசாயம் கடன் தள்ளுபடி ஆணையம்' உருவாக்கி கடன் தள்ளுபடியின் அளவை நிர்ணயம் செய்யப்படும். காப்பீட்டுத் திட்டத்தை மாற்றுவதன் மூலம் பயிர் இழப்பு ஏற்பட்டால் 30 நாட்களுக்குள் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பணம் செலுத்துவதை உறுதி செய்யப்படும். விவசாயிகளின் நலனை முன்னிறுத்தி புதிய இறக்குமதி-ஏற்றுமதி கொள்கையை உருவாக்குவதற்கான உறுதி அளிக்கப்படும். விவசாயப் பொருட்களில் இருந்து ஜிஎஸ்டியை நீக்கி விவசாயிகள் ஜிஎஸ்டி வரிக்கொள்கையில் இருந்து விடுவிக்கப்படுவர். காங்கிரஸின் நோக்கம் நாட்டின் மண்ணை வியர்வையால் பாசனம் செய்யும் விவசாயிகளின் வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், மனநிறைவாகவும் மாற்றுவதுதான், இந்த 5 வரலாற்று முடிவுகள் அந்த திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளாகும் என அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
Tags :