வடிவேலுவின் தம்பி உடலுக்கு அஞ்சலி செலுத்திய அமைச்சர்

மதுரை விரகனூரில் காலமான நடிகர் வடிவேலுவின் தம்பி உடலுக்கு அமைச்சர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.நடிகர் வடிவேலுவின் உடன்பிறந்த தம்பி ஜெகதீஸ்வரன் (52) உடல் நலக்குறைவால் இன்று மதுரை விரகனூரில் அவரது இல்லத்தில் காலமானார்.வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி அவர்கள் இன்று காலை அவரது வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். உடன் நடிகர் வடிவேலு உள்ளார்.
Tags :