செப்., 15 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

by Staff / 28-08-2023 03:13:31pm
செப்., 15 வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தற்போது திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை இன்று வரை நீட்டித்த சிறப்பு நீதிமன்றம், அவரை நேரில் இன்று ஆஜர்படுத்த சிறைத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கைதாகி புழல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த நிலையில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வரை நீதிமன்றக்காவலை நீட்டித்து நீதிபதி ரவி உத்தரவிட்டுள்ளார். செந்தில் பாலாஜி ஜாமீன் மனு தாக்கல் செய்தால் தாம் விசாரிக்க முடியாது என்றும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo