3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர்.
தவெக மாவட்டப் பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற உள்ளது. பனையூரில் உள்ள கட்சி தலைமையகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2 அல்லது 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் வீதம் 105 முதல் 110 மாவட்ட செயலாளர்களை நியமனம் செய்ய விஜய் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், விஜய் தமிழகம் முழுவதும் மேற்கொள்ள உள்ள சுற்றுப்பயணம் குறித்து அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tags : 3 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர்.