மத்திய அமைச்சர் ராம்மோகன் நாயுடுவிடம் துரை வைகோ கோரிக்கை
திருச்சி எம்.பி., துரை வைகோ, மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடுவை இன்று சந்தித்து, திருச்சி விமான நிலைய ஓடுதள விரிவாக்கப் பணிகளை விரைவாகத் தொடங்கவும், கீழக்குறிச்சி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கவும் வலியுறுத்தினார். மேலும், ரேடார் அமைப்பின் இடம் மற்றும் உயரம் குறித்து தொழில்நுட்ப ஆய்வு மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்தார். இந்த கோரிக்கைகள் அனைத்தும் பரிசீலிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.
Tags :


















