காலை உணவு சமைக்காததால் தாயை கொன்ற சிறுவன்

by Staff / 03-02-2024 04:54:04pm
காலை உணவு சமைக்காததால் தாயை கொன்ற சிறுவன்

கர்நாடக மாநிலம் பெங்களூருவில், 17 வயது சிறுவன் ஒருவன் கே.ஆர்.புரம் காவல் நிலையத்திற்கு வந்து நான் எனது தாயை கொலை செய்து விட்டேன் என கூறியுள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் சிறுவன் வீட்டிற்கு சென்று பார்த்தபோது தலையில் பலத்த காயத்துடன் ரத்தவெள்ளத்தில் சிறுவனின் தாயார் கிடந்துள்ளார். இதனையடுத்து சிறுவனிடம் நடத்திய விசாரணையில், தனது தாய் காலை உணவு தயாரிக்காததால் இருவருக்கும் சண்டை ஏற்பட்டது, பின்னர் வாக்குவாதம் முற்றி அருகில் இருந்த இரும்பு கம்பியால் தலையில் அடித்தேன் என கூறியுள்ளார். முதலில் மயங்கிவிட்டார் என நினைத்தேன். அவர் எழுந்திருக்காததால் இங்கு வந்தேன் என கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories