83-வது கோல்டன் குளோப் விருதுவழங்கும் விழா

by Admin / 12-01-2026 07:43:47pm
83-வது கோல்டன் குளோப் விருதுவழங்கும் விழா

நேற்று அமெரிக்கா லாஸ் ஏஞ்சல்சில் உள்ள வெவர்லி ஹில்டன் ஹோட்டலில் சிறப்புற நடந்தது. 2025 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாராட்டும் 83-வது கோல்டன் குளோப் விருதுகள்விழா நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு தொகுத்து வழங்கிய நிக்கி கிளாஸ் இந்த ஆண்டும் அந்தப் பணியை திறம்படச் செய்தார். உன் பேட்டில் ஆஃப்டர் அனதர் திரைப்படம் அதிகபட்சமாக 9 பரிந்துரைகளைப் பெற்று முதலிடம் பிடித்தது. உலக அளவில் படைப்பாளர்களின் படைப்பாற்றல் மற்றும் செல்வாக்கை கொண்டாடும் 25 அதிகம் கேட்கப்பட்ட ஒளிபரப்புகளின் பட்டியலில் இருந்து பரிந்துரைக்கப்பட்டவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர் ஆப்பிள் ஸ்பாடிக் பை மற்றும் youtube போன்ற பிராட்காஸ்ட் தளங்களிலிருந்து நேரடி தரவுகள் பெறப்பட்டு அதன் அடிப்படையில் தேர்வாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

சிறந்த படம்  ஹாம்னெட்
சிறந்த படம் ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர் 
சிறந்த இயக்குனர்: பால் தாமஸ் ஆண்டர்சன் (படம்: ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்).
சிறந்த நடிகர் (டிராமா): வாக்னர் மௌரா (படம்: தி சீக்ரெட் ஏஜென்ட்).
சிறந்த நடிகை (டிராமா): ஜெஸ்ஸி பக்லி (படம்: ஹாம்னெட்).
சிறந்த நடிகர் (மியூசிக்கல் / காமெடி): திமோதி சாலமே (படம்: மார்ட்டி சுப்ரீம்).
சிறந்த நடிகை (மியூசிக்கல் / காமெடி): ரோஸ் பைர்ன் (படம்: இஃப் ஐ ஹாட் லெக்ஸ் ஐட் கிக் யூ).
சிறந்த துணை நடிகர்: ஸ்டெல்லன் ஸ்கார்ஸ்கார்ட் (படம்: சென்டிமென்டல் வேல்யூ).
சிறந்த துணை நடிகை: தேயானா டெய்லர் (படம்: ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்).
சிறந்த அனிமேஷன் படம்: கே-பாப் டெமான் ஹண்டர்ஸ்
சிறந்த அந்நிய மொழித் திரைப்படம்: தி சீக்ரெட் ஏஜென்ட் (பிரேசில்). 
தொலைக்காட்சிப் பிரிவு
சிறந்த தொடர் (டிராமா): தி பிட் 
சிறந்த தொடர் (மியூசிக்கல் / காமெடி): தி ஸ்டுடியோ
சிறந்த லிமிடெட் சீரிஸ்: அடோலெசென்ஸ் (
சிறந்த நடிகர் டிராமா சீரிஸ்: நோவா வைல் (தொடர்: தி பிட்).
சிறந்த நடிகை டிராமா சீரிஸ்: ரியா சீஹார்ன் (தொடர்: புளூரிபஸ்). 
சிறப்பு விருதுகள்
வாழ்நாள் சாதனையாளர் விருது, ஹெலன் மிர்ரென்.
கரோல் பர்னெட் விருதுசாரா ஜெசிகா பார்க்கர்.
சிறந்த பாட்காஸ்ட்குட் ஹேங் வித் அமி போஹ்லர். 

83-வது கோல்டன் குளோப் விருதுவழங்கும் விழா
 

Tags :

Share via