அருவியில் பெண்ணை நிர்வாணமாக குளிக்க வற்புறுத்திய கணவன்!

புனேவை சேர்ந்தவர் யமுனா இவருக்கு ஆண் குழந்தை பிறக்கவில்லை என்று அவரது கணவரும்,அவரது குடும்பத்தினரும் துன்புறுத்தி வந்தனர். இந்நிலையில், தான் மவுலானா பாபா ஜமாதர் என்ற மந்திரவாதியை கணவரின் குடும்பத்தினர் அணுகினர். அப்போது அவர், ‛‛அருவியில் அந்த பெண்ணை பொதுமக்கள் மத்தியில் நிர்வாணமாக குளிக்க செய்தால் ஆண் குழந்தை பிறக்கும். அதோடு மட்டுமின்றி கணவரின் தொழிலும் வளர்ச்சி அடையும்'' என கூறியுள்ளார். இதை உண்மை என நம்பிய அவரது கணவரும்,அவரது குடும்பத்தினரும் பரிகாரம் செய்ய வேண்டும் என அந்த பெண்ணை ராய்காட் மாவட்டத்திலுள்ள அருவிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு அவரை பொதுமக்கள் முன்னிலையில் நிர்வாணமாக குளிக்க வற்புறுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் மறுப்பு தெரிவித்துள்ளார்.இந்த துன்புறுத்தல் குறித்து யமுனா போலீசில் புகார் செய்தார். புகாரில், கடந்த 2013-ம் ஆண்டு முதல் தனது கணவர் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தியுள்ளனர். மேலும் ஆண் குழந்தை பெறுவதற்காக பலமுறை இதுபோன்ற சடங்குகளுக்கு ஆளானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், பொது இடத்தில் உள்ள அருவியில் நிர்வாணமாக குளித்தால் ஆண் குழந்தை பிறக்கும் என்று கூறியதன் அடிப்படையில் கணவரின் குடும்பத்தினர் அவரை சடங்கு செய்ய வற்புறுத்தி ராய்காட் மாவட்டத்தில் உள்ள நீர்வீழ்ச்சிக்கு அழைத்துச் சென்றதாக சாமியார் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கணவர் தன்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கி தனது பெயரில் ரூ.75 லட்சம் வங்கிக்கடன் பெற்றதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.இந்த புகாரின் அடிப்படையில் அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 2 பேர், மவுலானா பாபா ஜமாதர் என 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags :