மோசடியாக ஆவணங்களை ஏற்படுத்தி கனிமங்களை ஏற்றுச் சென்ற லாரிகள் பிடிப்பட்டன.

by Editor / 11-04-2023 09:52:08pm
மோசடியாக ஆவணங்களை ஏற்படுத்தி கனிமங்களை ஏற்றுச் சென்ற லாரிகள் பிடிப்பட்டன.

தென்காசி மாவட்டம் கடையத்தில் இன்று   கடையம் காவல் உதவி ஆய்வாளர் நவநீதகிருஷ்ணன் மற்றும் காவலர் சத்தியமூர்த்தி ஆகியோர் வாகனச் சோதனை சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது அந்தவழியாக வந்த கேரளா பதிவெண் கொண்ட லாரிகளைபிடித்து சோதனைசெய்ததில் அனுமதியின்றி கேரளா மாநில வாகனங்கள் தமிழ்நாட்டுக்குள் கனிம வளங்களை ஏற்றி..தமிழகத்திற்குள் சட்டவிரோதமாக  சண்டிங் அடித்து கொண்டிருந்தது.ஆவணங்களை ஆய்வு செய்தபோது உள்ளூருக்குள்ளே கனிமங்களை சட்டவிரோதமாக எடுத்து அதனை போக்குவரத்துக்கு பயன்படுத்துவதை கண்டுபிடித்து உடனடியாக காவல் நிலையத்திற்கு இரண்டு லாரிகளை கொண்டு சென்றனர்.தொடர்ந்து அவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திவருகின்றனர்.இதுபோன்று கேரள பதிவெண் கொண்ட லாரிகள் செங்கோட்டை,கட்டளைக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் நிறுவனங்களுக்கு லோக்கல் ட்ரீப் இயக்கம்  நடந்துவருகிறது.இதேபோன்று பண்பொழி,கலங்காத கண்டி,ஆகிய பகுதிகளிலும் இதுபோன்ற வாகனங்கள் இயங்கிவருவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள்  வேகமாக பரவி வருகின்றன.மேலும் தென்காசி மாவத்திலுள்ள குவாரிகளுக்கு டிரான்சிட் பாஸ் இரண்டுநாட்களாக வழங்காமல் உள்ள நிலையில் காணாமவளங்களை ஏற்றிவரும் வாகனங்கள் கண்காணிக்கபட்டதில் செங்கோட்டையில் எந்த ஆவணமும் இல்லாமல் வந்த ஒருவாகனத்தை புவியியல் துறை பறக்கும் படையினர் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

 

Tags :

Share via