யசோதா மற்றும் கிருஷ்ணா ஓவியம் 167. 2 கோடிக்கு விற்பனையாகி, புதிய உலக சாதனை.

by Admin / 06-04-2026 12:44:17am
 யசோதா மற்றும் கிருஷ்ணா ஓவியம் 167. 2 கோடிக்கு விற்பனையாகி, புதிய உலக சாதனை.

ராஜா ரவி வர்மாவால் 1890 களில் வரையப்பட்ட தைல வண்ண ஓவியம் ஏப்ரல் ஒன்று 2026 அன்று மும்பையில் உள்ள சப்ரான் ஆா்ட் ஏல நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஏலத்தில் யசோதா மற்றும் கிருஷ்ணா ஓவியம் 167. 2 கோடிக்கு விற்பனையாகி, புதிய உலக சாதனையை படைத்தது. இந்த அரிய ஓவியத்தை சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனரும் இந்திய கோடீஸ்வரர்களில் முக்கியமானருமான சைரஸ் பூனவாலா ஏலத்தில் எடுத்தார். இந்த ஓவியம் ,அன்னை யசோதைக்கும் குழந்தை கிருஷ்ணருக்கும் இடையிலான அன்பை மிக நுணுக்கமாக சித்தரிக்க கூடிய ஒரு இந்திய கலாச்சாரத்தின் புதையலாகவே இதை கருதலாம். இதற்கு முன்பு எம் .எஃப் ஷைனின் கிராம் யாத்ரா ஓவியம் 118 கோடிக்கு விற்பனையானது சாதனையாக இருந்தது .அதனை இந்த ஓவியம் முறியடித்து உலக சாதனை படைத்துள்ளது.

 

 

Tags :

Share via
Logo