ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலின் டெல்அவிவ் நகருக்கான அனைத்து விமானங்களையும் மே 31 வரை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

by Admin / 06-04-2026 12:56:52am
ஏர் இந்தியா நிறுவனம் இஸ்ரேலின் டெல்அவிவ் நகருக்கான அனைத்து விமானங்களையும் மே 31 வரை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஏர் இந்தியா நிறுவனம் மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இஸ்ரேலின் டெல்அவிவ் நகருக்கான அனைத்து விமானங்களையும் மே 31 வரை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானங்களில் பயணிக்க ஏற்கனவே முன்பதிவை செய்தவர்களுக்கு ஒரு முறை கட்டணமில்லாமல் பயண தேதியை மாற்றிக் கொள்ளும் வசதி அல்லது முழு பணத்தை திரும்பப்பெறும் வசதி வழங்கப்படும் என ஏர் இந்தியா தெரிவித்துள்ளது .பயணிகள் மேலதிக தகவல்களுக்கு ஏர் இந்தியாவின் வாடிக்கையாளர் சேவை மையத்தை அல்லது 912269339999 ஆகிய எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது .ஏர் இந்தியா மட்டுமின்றி லூப் தான் சா பிரிட்டிஷ் ஏர்வேஸ் போன்ற பல சர்வதேச விமான நிறுவனங்களும் மே 31 வரை இஸ்ரேலுக்கான சேவைகளை ரத்து செய்துள்ளன. இஸ்ரேலிய விமான நிறுவனமான எல் அல் மட்டுமே கடும் கட்டுப்பாடுகளுக்கு மத்தியிலும் தம் சேவைகளை தொடர்ந்து கொண்டிருக்கிறது.

 

Tags :

Share via

More stories

Logo