திரிணாமுல் காங்கிரஸ் ஸ்பான்சர் செய்த மகா ஜங்லே ராஜ் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி மால்டாவின் காலியாசக் ii பகுதியில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணியில் ஈடுபட்டிருந்த மூன்று பெண்கள் உள்பட ஏழு நீதித்துறை அதிகாரிகள் ஒரு கும்பலால் சுமார் 9 மணி நேரம் சிறைபிடிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தை திரிணாமுல் காங்கிரஸ் ஸ்பான்சர் செய்த மகா ஜங்லே ராஜ் என்று பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்தார். நீதிபதி மற்றும் அரசியலமைப்பு நடைமுறைகளுக்கே பாதுகாப்பு இல்லாத மாநிலத்தில் சாதாரண மக்களின் பாதுகாப்பு எப்படி இருக்கும் என்றும் பிரதமர் கேள்வி எழுப்பினார் இந்த சம்பவத்தை துரதிஷ்டவசமானது மற்றும் திட்டமிடப்பட்டது என்று குறிப்பிட்ட உச்ச நீதிமன்றம் மேற்குவங்க அரசு நிர்வாகத் தோல்வியை கடுமையாக சாடியது. 2026 மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு நடந்த பேரணியில் திரிணா மூல் காங்கிரசின் பயம் அரசியலுக்கு எதிராக பாஜகவின் நம்பிக்கை வெற்றி பெறும் என்றும் பிரதமர் நம்பிக்கையோடு பேசினார். மேற்கு வங்க சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி மற்றும் 29ஆம் தேதி ஆகிய இரு தேதிகளில் நடைபெற உள்ளது.
Tags :



















