மூதாட்டி ஒருவரிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகியதால் கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்.

by Editor / 02-12-2022 10:36:09pm
 மூதாட்டி ஒருவரிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகியதால் கிராம நிர்வாக அலுவலர் சஸ்பெண்ட்.

விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே பிள்ளையார்குளம் பகுதியில் கிராம நிர்வாக அலுவலராக பணிப்புரிந்து வருகிறவர் செல்லப்பாண்டி. இவர் மூதாட்டி ஒருவரிடம் லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இதுகுறித்து தகவலறிந்த அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர், ஆடியோ வெளியான ஒரு சில மணி நேரத்திலேயே, கிராம நிர்வாக அலுவலர் செல்லப்பாண்டியை பணியிடை நீக்கம் செய்து அதிரடியாக உத்தரவிட்டார்.
 

 

Tags :

Share via

More stories