பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் பியூஸ் கோயல் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்வதற்காக வருகை
அதிமுக தலைமை அலுவலகமாக ராயப்பேட்டை எம்ஜிஆர் மாளிகையில் இன்று மத்திய அமைச்சரும் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளருமான பியூஸ் கோயல் அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு இறுதி செய்வதற்காக வருகை புரிந்துள்ளார். .அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவின் முக்கிய முன்னாள் அமைச்சர்கள் வருகை புரிந்துள்ளனர். பாரதியார் ஜனதா கட்சியை சார்பாக மத்திய இணை அமைச்சர்எல்.முருகன், பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோர் வருகை புரிந்துள்ளனர்., என்,டி,ஏ கூட்டணியில் அ.தி.மு.க, பா.ஜ.க, பா.ம.க ,அ.ம.மு .க கட்சிகள் உள்ளன. இதில் அ.தி.மு.க எத்தனை தொகுதிகளில் போட்டியிடப் போகிறது .பாஜக எத்தனை தொகுதிகள் அளிக்கப் போகிறார்கள் .. பாட்டாளி மக்கள் கட்சி ,அம்மா முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் வழங்க உள்ளனஎன்பது இப்பொழுது பேச்சுவார்த்தையின் மூலம் முடிவு செய்யப்பட்டு என்று அறிவிக்கப்படும் என தெரிகிறது. என். டி. ஏ கூட்டணியில் தமிழக தலைமை வகிக்கும் அ.தி.மு.க அதிக தொகுதியில் போட்டியிடும் பொருட்டு 180 க்கு மேற்பட்ட தொகுதிகளை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என தெரிகிறது. சமீபகாலமாக அதிமுகவை பா.ஜ.க தான் இயக்கிக் கொண்டிருக்கிறது என்கிற பேச்சு அடிபடுகின்ற நிலையில், அதை உடைக்கும் விதமாக அ.தி.மு.க தலைமையகத்தில் இந்த பேச்சு வார்த்தை உடன்பாடு நடக்கிறது.
அம்மா முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நீண்ட காலத்திற்குப் பிறகு அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வருகை புரிந்துள்ளார்.
Tags :


















