புளியரை சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் மோட்டார் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

by Staff / 20-10-2023 04:40:17pm
புளியரை சோதனை சாவடியில் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் மோட்டார் ஆய்வாளர் பணியிடை நீக்கம்.

தமிழக கேரள எல்லையான தென்காசி மாவட்டம் புளியரை போக்குவரத்து அலுவலக சோதனை சாவடியில் அதிக அளவில் வாகன ஓட்டிகள் இடம் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவலை லஞ்ச ஒழிப்பு போலீசார் 20.10.2023 அன்று புளியரை வாகன சோதனைச் சாவடியில் சோதனை நடத்துவதற்காக சென்றனர் அப்பொழுது பணி முடித்து ஊருக்கு 
 மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேமா ஞானகுமாரி தனது வாகனத்தில் புறப்பட்டு உள்ளார் அந்த வாகனத்தை கற்குடி விலக்கில் வைத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர் அப்பொழுது அந்த வாகனத்தில் கட்டு கட்டாக கணக்கில் வராத ரொக்கப் பணம் 2இலட்சத்து 76 ஆயிரத்து400   ரூபாய் மற்றும் வாகன ஓட்டிகள் வசம் இலஞ்சமாக பெற்ற முட்டை, உள்ளிட்ட பொருட்களை பறிமுதல்செய்தனர். இந்த நிலையில் மோட்டார் வாகன ஆய்வாளர் பிரேம ஞானகுமாரியிடம் காலை எட்டு முப்பது மணியிலிருந்து மாலை 6 மணி வரை தொடர்ந்து அவர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதன் தொடர்ச்சியாக தென்காசி வட்டார போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினரிடமும்  லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விளக்கங்களை கேட்டு அறிந்தனர். இதன் தொடர்ச்சியாக லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை குறித்து தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது தொடர்ந்து அவர் இன்று புளியரை சோதனைச் சாவடி போக்குவரத்து ஆய்வாளர் பிரேம ஞானகுமாரியை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார் அதன் தொடர்ச்சியாக பணிநீக்கத்தினுடைய உத்தரவை இன்று தென்காசி வட்டார போக்குவரத்து ஆய்வாளர் கனகவல்லி திருநெல்வேலியில் வசித்து வரும்   சோதனை சாவடி ஆய்வாளர் பிரேம ஞானகுமாரியிடம் ஒப்படைத்தார்.

 

Tags :

Share via