‘தீபாவளிக்கு 4 நாட்கள் லீவு’.. தமிழக அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு

by Staff / 13-10-2024 02:58:20pm
‘தீபாவளிக்கு 4 நாட்கள் லீவு’.. தமிழக அரசு எடுக்கப்போகும் முக்கிய முடிவு

தீபாவளி பண்டிகை இந்தாண்டு அக்டோபர் 31ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், அதற்கு அடுத்த நாளான நவம்பர் 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை வருகிறது. அந்த ஒரு நாள் விடுமுறை வழங்கினால் மொத்தம் நான்கு நாட்கள் விடுமுறையாக கிடைக்கும் என்பதால் அந்நாள் விடுமுறை வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநில தலைவர் அமிர்தகுமார், முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளார். இதற்கான ஒப்புதல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அரசு அலுவலர்கள் காத்திருக்கின்றனர்.

 

Tags :

Share via