வாகனம் தாக்கப்பட்டு கீழே சாய்ந்து காட்டு யானைகளின் அட்டகாசம்.

by Editor / 16-08-2022 08:14:34am
 வாகனம் தாக்கப்பட்டு கீழே சாய்ந்து காட்டு  யானைகளின் அட்டகாசம்.

 கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூர் காப்பு காட்டில் இருந்து நேற்று இரவு வெளியேறிய 2 யானைகள் அந்த கிராமத்தில் உள்ள மரப்பாவின் மகன் ருத்ரா என்பவரின் வீட்டருகே நிறுத்தப்பட்டிருந்த அவர்களின் 2 டெம்போ வாகனங்களை கீழே தள்ளி  அதில் இருந்த தக்காளியை தின்றும் வாகனங்களை சேதப்படுத்தியும் சென்றுள்ளன.

இன்று காலையில் வாகனம் தாக்கப்பட்டு கீழே சாய்ந்து தக்காளி பெட்டிகள்  சிதறிக்கிடப்பதை  பார்த்ததும் ருத்ரா மற்றும் அங்குள்ள பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.அங்கு தற்போது பொதுமக்களிடையே  சம்பவம் பரபரப்பை தக்காளி ஏற்படுத்தி உள்ளது. பாதிக்கப்பட்ட வாகனத்தை சரிசெய்து யானைகளை அடர்ந்த காட்டுற்கு விரட்டியடிக்க வேண்டுமென வனத்துறைக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.

 வாகனம் தாக்கப்பட்டு கீழே சாய்ந்து காட்டு  யானைகளின் அட்டகாசம்.
 

Tags :

Share via

More stories