இன்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை.

by Admin / 27-03-2026 02:26:45am
இன்று பிரதமர் நரேந்திர மோடி மாநில முதலமைச்சர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை.

இன்று பிரதமர் நரேந்திர மோடி மேற்காசிய நாடுகளில் போர் சூழல் உருவாகி இருக்கின்ற நிலையில் , பொருளாதாரம் மற்றும் எரிபொருள் சவால்களை எதிர்கொள்ளும் பொருட்டு மாலை 6.30 மணிக்கு மாநில முதலமைச்சர்களுடன் காணொளி காட்சி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். சர்வதேச அளவில் நிலவும் பதற்றத்தால் எரிசக்தி விநியோகம் குறிப்பாக சமையல் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை சமாளிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் .மத்திய மற்றும் மாநில அரசுகள் ஒருங்கிணைந்து செயல்படுவதன் மூலம் விநியோகம்  மற்றும் எரி பொருள் சீராக இருப்பதை உறுதி செய்ய பிரதமர் வலியுறுத்த உள்ளார் .கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் வர்த்தகம் நிலைகளில் ஏற்படும் தடைகளால் இந்திய பொருளாதாரத்திற்கு ஏற்படும் சவால்களை முறியடிக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்படலாம்.. தற்போது தமிழ்நாடு, கேரளா, மேற்குவங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் தேர்தல் நடைபெற உள்ளதால்  தேர்தல் நடத்தை விதியின் காரணமாக கூட்டத்தில் முதலமைச்சர்கள் பங்கேற்க மாட்டார்கள். அவர்களுக்கு பதிலாக ,அந்தந்த மாநிலத் தலைமைச் செயலாளர் பங்கேற்பார்கள் என்று தகவல்.

 

Tags :

Share via

More stories