பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச ஜெவாரில் அமைக்கப்பட்டுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.

by Admin / 27-03-2026 02:38:17am
பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச ஜெவாரில் அமைக்கப்பட்டுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இன்று உத்தரபிரதேச ஜெவாரில் அமைக்கப்பட்டுள்ள நொய்டா சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்க உள்ளார். இந்த விமான நிலையம் ஆண்டுக்கு 12 மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்டதாகும். இது இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. உத்தரப்பிரதேச அரசு இதை ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரம் ஆக மாற்றுவதற்கான கேம் சேஞ்சர் என்று நம்புகிறது. இந்த விமான நிலையம் டெல்லி ncr விமான நிலையத்தின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதோடு சரக்கு போக்குவரத்து மற்றும் சர்வதேச இணைப்பையும் மேம்படுத்தும். சுமார் 30,000 கோடி முதலீட்டில் யமுனா எக்ஸ்பிரஸ்வே பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த திட்டம் வேலை வாய்ப்பு ,ரியல் எஸ்டேட் மற்றும் தொழில் வளர்ச்சிக்கு வி,த்திடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்பொழுது ஒரு ஓடு பாதை ஒரு முனையத்துடன் செயல்படும் விமான நிலையம் பின்னாளில் ஐந்து ஓடுபாதைகளுடன் மிகப் பெரிய அளவில் விரிவுபடுத்த உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும் பொழுது கௌதம் புத்தா நகர் பகுதியில் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை, மின்னணுவியல் உற்பத்தி மற்றும் தளவாடத் துறைகள் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்கு வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.

 

Tags :

Share via

More stories