குமரி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 

by Editor / 03-05-2021 05:35:04pm
குமரி தொகுதியில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 


கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் வெற்றி பெற்றார்.
கடந்த 2019-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலில் கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ், திமு.க. கூட்டணி சார்பில் எச்.வசந்தகுமார் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதையொட்டி சட்டசபை பொதுதேர்தலோடு கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்கு இடைதேர்தலும் சேர்த்து நடத்தப்பட்டது.
இந்த தேர்தலில் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி சார்பில் மறைந்த முன்னாள் எம்.பி. வசந்தகுமாரின் மகனும் தமிழக காங்கிரஸ் கட்சி பொது செயலாளருமான விஜய் வசந்த் என்ற விஜயகுமார் போட்டியிட்டார். அவரை எதிர்த்து முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் போட்டியிட்டார். இந்த போட்டியில் 
பொன் ராதாகிருஷ்ணனை விட காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் 1 லட்சத்து 34 ஆயிரத்து 374 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இவர்களுக்கு அடுத்த படியாக அனிட்டர் ஆல்வின் 52 ஆயிரத்து 221 வாக்குகளும், சுபா சார்லஸ் 8,447 வாக்குகளும் பெற்றிருந்தனர். இதில் தபால் ஓட்டுகள் முடிவு வராததால் அந்த எண்ணிக்கை சேர்க்கப்படவில்லை.
மொத்த வாக்குகள்- 15,71,651
பதிவான வாக்குகள்- 10,82,820
விஜய் வசந்த் (காங்கிரஸ்)- 5,67,280
பொன்.ராதாகிருஷ்ணன் (பா.ஜனதா)- 4,32,906
அனிட்டர் ஆல்வின் (நாம் தமிழர் கட்சி)- 52,221
சுபா சார்லஸ் (மக்கள் நீதி மய்யம்)- 4,899
 

 

Tags :

Share via