நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று மாணவியை சீரழித்த மாணவர்

by Staff / 03-10-2022 04:34:19pm
நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று மாணவியை சீரழித்த மாணவர்

நாகர்கோவில் ராமன்புதூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி, கன்னியாகுமரி பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் படித்து வருகிறார். அதே கல்லூரியில் கன்னியாகுமரி சின்ன முட்டம் பகுதியைச் சேர்ந்த 18 வயது வாலிபரும் படித்து வருகிறார். அவருக்கும் மாணவிக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு மாயமானார். அவரை பெற்றோர் தேடினார்கள். இந்த நிலையில் வீட்டிற்கு திரும்பிய மாணவி, தன்னுடன் படித்த வாலிபர் ஒருவர், நண்பர் வீட்டுக்கு அழைத்துச் சென்று தன்னை சீரழித்து விட்டதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், இது குறித்து நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தனர். மகளிர் போலீசார் இது தொடர்பாக கல்லூரி மாணவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து போலீசார் இன்று காலை மாணவனை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட மாணவியை மருத்துவ பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

 

Tags :

Share via

More stories