நிருபர் முத்துக்குமார் இருசக்கர வாகனத்தில் சென்றபோது குறுக்கே நாய் வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்துபலி.

நெல்லை மாவட்டம் என் ஜி ஓ ஏ காலனி சேர்ந்தவர் முத்துக்குமாரசாமி 52. இவர் (பாலிமர் டிவி) தனியார் தொலைக்காட்சியில் நிருபராக பணியாற்றி வருகிறார். அவருக்கு சூரியகல்யாணி மனைவியும் சுப்பிரமணியன் 23 என்ற மகனும் ஹரிணி 20 மகளும் உள்ளனர். இவர் நேற்று இரவு 10 மணியளவில் தாழையூத்து பகுதியில் செய்தி சேகரிப்பதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றபோது குறுக்கே நாய் வந்ததில் நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலமாக அடிபட்டதில் ரத்தம் வெளியேறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Tags : நிருபர் முத்துக்குமார்