குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் .

by Editor / 09-10-2023 08:36:17am
குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் .

 

தென்காசி மாவட்டம்,  குற்றாலம் அருவிக்கு அருகே அமைந்துள்ள குற்றாலம் குற்றாலநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும்  சித்திரை விசு,ஐப்பசி விசு திருவிழா ஆகிய திருவிழாக்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில், திரு குற்றாலநாதர் சுவாமி திருக்கோவிலில் ஐப்பசி மாத விசு திருவிழாவானது இன்று கொடியேற்றத்துடன்  தொடங்கியது.
இந்த கொடியேற்ற நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் சாமியை தரிசனம் செய்த நிலையில், பஞ்ச வாத்தியங்கள் முழங்க சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
 தொடர்ந்து, திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான திருவிலஞ்சி குமாரர் கோயில் சமேத வள்ளி தெய்வானையை குற்றாலநாதர் கோயிலுக்கு அழைத்து வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று நடைபெற உள்ள சூழலில், வருகின்ற 12ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், 13ஆம் தேதி வெள்ளிக்கிழமை 4 திருத்தேர்கள் அடங்கிய தேரோட்ட நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 16ஆம் தேதி சித்திர சபையில் அருள்மிகு நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும், பச்சை சாத்தி தாண்டவ தீபாரணையும் வெகு சிறப்பாக நடைபெற உள்ளது மொத்தம் 10 நாட்கள் நடைபெறும் இந்த ஐப்பசி விசு திருவிழாவில் நாள்தோறும் சுவாமிக்கு பல்வேறு சிறப்பான அலங்காரங்கள் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்-

 

Tags : குற்றாலம் குற்றாலநாதர் ஆலயத்தில் ஐப்பசி திருவிழா கொடியேற்றம் .

Share via