பாரத் நியாய யாத்திரை பெயர் மாற்றம்

by Staff / 06-01-2024 02:30:28pm
பாரத் நியாய யாத்திரை பெயர் மாற்றம்

ஜனவரி 14ஆம் தேதி முதல் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் தொடங்க உள்ள ‘பாரத் நியாய யாத்திரை’யின் பெயர் ‘இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ என மாற்றப்பட்டுள்ளது. பெயர் மாற்றம் குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இருந்து இந்தப் பயணம் தொடங்கும். 2021ஆம் ஆண்டு ராகுல் நடத்திய 'இந்திய ஒற்றுமை யாத்திரை' என்பது மக்கள் மனதில் இடம்பிடித்திருப்பதாக உணர்ந்ததாகவும், அதனால் தான் பெயரை மாற்றியதாகவும் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via

More stories