கனமழையால் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதம்.

by Editor / 02-02-2023 02:24:46pm
கனமழையால் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கர் சம்பா தாளடி நெற்பயிர்கள் வயலில் சாய்ந்து சேதம்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கன மழையால் மாவட்ட முழுவதும் சுமார் 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட சம்பா பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. மயிலாடுதுறை, வில்லியநல்லூர், மணல்மேடு, சேத்தூர் திருக்கடையூர் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பயிர்கள் சாய்ந்து சேதமடைந்துள்ளது. இந்த மழையால் தற்போது அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் கொள்முதல் நிலையங்களில் உள்ள நெல் மூட்டைகள் மழையினால் பாதிக்கப்பட்டு வருவதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.


 

 

Tags :

Share via

More stories