எல்பின் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் இறங்கினார்.சிவகாசி ஜெயலட்சுமி
எல்பின் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் இறங்கினார்.சிவகாசி ஜெயலட்சுமி
திருச்சியில் செயல்பட்டுவரும் எல்பின் நிதி நிறுவனம் தன்னிடம் பெற்ற 3.75 கோடி ரூபாய் பணத்தை மோசடி செய்ததாக, சிவகாசி ஜெயலட்சுமி எல்பின் அலுவலகத்தின் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுவரும் சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் 20 வருடங்களுக்கு முன் பரபரப்பைக் கிளப்பியவர் சிவகாசி ஜெயலட்சுமி. அவர் திருச்சி மன்னார்புரத்தில் செயல்பட்டுவரும் எல்பின் நிதி நிறுவனம் முன்பு இன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இது குறித்து சிவகாசி ஜெயலட்சுமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “சில வருடங்களுக்கு முன் எல்பின் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்திச் சேர்ந்ததாகவும். அதன் பிறகு இதுவரை நூற்றுக்கணக்கானவர்களை இந்த நிதி நிறுவனத்தில் உறுப்பினராகச் சேர்த்துள்ளதாகவும், நேரடியாகவும், ஆன்லைன் மூலமாகவும் அவர்களிடமிருந்து கிட்டத்தட்ட 3.75 கோடி ரூபாய் பெற்று இந்த நிறுவனத்தில் கொடுத்து இருப்பதாகவும்,
செலுத்திய பணம் இரண்டு வருடங்களில் முதிர்வடைந்துவிட்டது. ஆனால், கடந்த ஒரு வருடமாக யாருக்கும் முதிர்வு தொகையைத் திருப்பித் தரவில்லை. மேலும், அவர்கள் கொடுத்த செக் பணமில்லாமல் ரிட்டன் ஆகிவிட்டது. பலமுறை பணம் கேட்டுதாகவும்,இன்னும் பணம் . கொடுத்தபாடில்லை. வேறு வழியில்லாமல்தான் அவர்களது அலுவலகத்தின் முன்பு போராட்டத்தை நடத்துகிறேன். எனது பணத்தை வாங்காமல் தான் அகல முடியாது என்று ஆவேசத்தோடு தெரிவித்தார்
Tags :