திமுக கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

by Admin / 11-07-2023 09:06:40pm
 திமுக  கட்சியிலிருந்து விலகி முன்னாள் அமைச்சர்  கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். கோவில்பட்டியில் c முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கயத்தார் மேற்கு ஒன்றியம் திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் அணி துணை அமைப்பாளர் பஷீர் மற்றும் 20-க்கும் மேற்பட்ட திமுக கட்சி நிர்வாகிகள் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் வைத்து அம்மா பேரவை மாவட்ட செயலாளர் செல்வகுமார் தலைமையில் முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். திமுக கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக உறுப்பினர் விண்ணப்ப படிவங்களை வழங்கினர். இதற்கு முன்னதாக கோவில்பட்டி அருகே  மந்தித்தோப்பு உள்ள துளசிங்க நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ மங்கள விநாயகர் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் வன்டானம் கருப்பசாமி, எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் ஆசூர் காளி பாண்டி, கயத்தார் நகர செயலாளர் கப்பல் ராமசாமி,நகர மன்ற உறுப்பினர் வள்ளியம்மா மாரியப்பன், செண்பகமூர்த்தி,முன்னாள் ஒன்றிய செயலாளர் போடு சாமி மற்றும் அதிமுக நிர்வாகிகள் கோபி, முருகன், உள்ளிட்டோர் பலர் கலந்து கொண்டனர்.  
 

Tags :

Share via

More stories