டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது: அமைச்சர் தகவல்

by Staff / 14-09-2023 11:39:36am
டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது: அமைச்சர் தகவல்

டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு மது விற்பனை 99 சதவிகிதம் தடுக்கப்பட்டுள்ளது என்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்த அவர், டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களுக்கு ரசீது கொடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ரசீது வழங்க ஏற்பாடு செய்யப்படும். நீதிமன்றம் வழிமுறைகளின் அடிப்படையில் எவ்வித தவறும் நடக்காமல் பார்களுக்கு அனுமதி வழங்கப்படும். டெட்ரா பேக் குறித்து அண்டை மாநிலங்களில் ஆய்வுசெய்து வருகிறோம். அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்டு வருகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்

 

Tags :

Share via

More stories