இன்று ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் விலை குறைந்து விற்கப்படுகிறது

by Admin / 02-08-2023 10:20:23am
இன்று ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் விலை குறைந்து விற்கப்படுகிறது

இன்று  ஒரு பவுன் ஆபரணத் தங்கம் 160 ரூபாய் விலை குறைந்து விற்கப்படுகிறது .தங்கத்தின் விலை தொடர்ச்சியாக கூடுவதும் குறைவதுமாகவே ஒரு நிலையற்ற தன்மையை கொண்டு விற்பனையாகி வருகிறது. நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் 5570 க்கு விற்கப்பட்டது. ஒரு பவுன் 44 ஆயிரத்து 560 ஆக இருந்தது. 24 கேரட் சுத்த தங்கம் நேற்று ஒரு கிராம் 6037 ஆகவும் ஒரு பவுன் 4896 ஆகவும் இருந்தது .இன்றைக்கு அது ஒரு கிராம் 6017 ஆகவும் ஒரு பவுன் 48,136 ரூபாயாகவும்  விற்பனை செய்யப்படுகிறது .நேற்று ஒரு கிராம் வெள்ளி எண்பத்தி ஒரு ரூபாய் விற்கப்பட்ட நிலையில் ,இன்று 70 காசு குறைந்து 80 ரூபாய் 30 பைசாவாக விற்கப்படுகிறது .ஒரு கிலோ வெள்ளி 80 ஆயிரத்து 300 ரூபாய் ஆக விற்கப்படுகிறது.

 

Tags :

Share via