தூய்மைப் பணியாளர் மரணம் விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி

சென்னை கண்ணகிநகர் பகுதியைச் சேர்ந்த தூய்மைப் பணியாளர் வரலட்சுமி என்ற பெண் இன்று (ஆக.23) அதிகாலை 4 மணியளவில் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது உடலுக்கு விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அவர் வெளியிட்ட பதிவில், “மழைநீரில் ஏற்பட்ட மின்கசிவினால் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது கணவர், பிள்ளைகள் உள்ளிட்ட உறவினர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினேன். மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினேன்” என குறிப்பிட்டுள்ளார்.
Tags : தூய்மைப் பணியாளர் மரணம் விசிக தலைவர் திருமாவளவன் நேரில் அஞ்சலி