15 வயது சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற துணை நடிகை கைது.

by Staff / 23-08-2025 04:17:56pm
 15 வயது சிறுமியை  விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற துணை நடிகை கைது.

சென்னை கோயம்பேடு நூறடி சாலையில் உள்ள தங்கும் விடுதியில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, தனிப்படை போலீசார் விடுதியில் சோதனை நடத்தியபோது அங்கு கே.கே.நகர் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை வாடிக்கையாளர் ஒருவருக்கு விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்றது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து, சிறுமியை மீட்ட போலீசார் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சினிமா துணை நடிகை நாகம்மா, நாகராஜ் மற்றும் அஞ்சலி உள்ளிட்ட 3 பேரை அதிரடியாக கைது செய்தனர்.

 

Tags : 15 வயது சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்த முயன்ற துணை நடிகை கைது.

Share via