மிசோரம் மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
மிசோரம் மக்களுக்கு மாநில தின வாழ்த்துக்களை பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸில் பதிவிட்டுள்ள அவர், மிசோரமின் தனித்துவமான கலாச்சார நாடு. அதன் செழுமையான அழகு மற்றும் அதன் மக்களின் அன்பான மனப்பான்மை ஆகியவற்றால் இந்தியா மிகவும் பெருமை கொள்கிறது. மிசோரம் கலாச்சாரம் மிகவும் ஊக்கமளிக்கிறது. பாரம்பரியம் மற்றும் நல்லிணக்கத்தின் கலவையை உள்ளடக்கியது. மிசோரமின் தொடர்ச்சியான முன்னேற்றம், அமைதி மற்றும் செழிப்புக்காக பிரார்த்தனை செய்கிறேன் என கூறியுள்ளார்.
Tags :