கடல் மேற்பரப்பில் உலாவரும் ஆயிரகணக்கான ஜெல்லி மீன்கள்

இத்தாலி டிரஸ்ட் கடற்பகுதியில் பெரியதாக காணப்படும் பேரல் வகை ஜெல்லி மீன்கள் வழக்கத்திற்கு மாறாக அதிக அளவில் தென்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பருவநிலை மாற்றம் மற்றும் கடலின் வெப்பநிலை உள்ளிட்ட காரணங்களால் வழக்கத்திற்கு மாறான ஜெல்லி மீன்கள் ஒரே நேரத்தில் படையெடுத்து உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். கடல் வெப்பநிலை மாற்றத்தால் ஜெல்லி மீன்கள் இனப்பெருக்கம் அதிகரித்தும் அதிக அளவில் தென்பட காரணம் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Tags :