பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 15 இந்தியர்கள் பலி

ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி, பூஞ்ச், டாங்தார் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 15 இந்தியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 43 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதிகளில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15ஆக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஞ்ச், குப்வாரா மற்றும் பாராமுல்லா மாவட்டங்களில் உள்ள வீடுகள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளன.
Tags :