"கோயில்களை நிர்வகிக்க உதவுகிறது அறநிலையத்துறை"ஆதினம் ஸ்ரீ சிவஞானம்

by Editor / 27-06-2025 02:28:34pm

அறநிலையத்துறை கோயில்களை நிர்வகிக்க உதவுகிறது என தவத்திரு மயிலம் பொம்மபுரம் ஆதினம் ஸ்ரீ சிவஞானம் கூறியுள்ளார். மேலும் அவர், "அறநிலையத்துறை சட்டத்தினால் இன்று, ரூ.6,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை மீட்டுள்ளோம். இச்சட்டம் கோயில்களை நிர்வகிப்பதற்கு உறுதுணையாக இருக்கிறது. அறநிலைத்துறை தேவையா? என பலர் பேசுகிறார்கள். ஆனால், ஒரு அரசு செயல்பட திட்டங்கள், வழிமுறைகள் தேவை, அதற்குதான் சட்டங்கள் உருவானது, இதை செயல்படுத்த நல்ல துறைகள் தேவை” என்று தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via