சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

by Staff / 26-02-2024 12:01:41pm
சாலை விபத்தில் 9 பேர் உயிரிழப்பு

பீகார் மாநிலம் கைமூர் மாவட்டத்தில் உள்ள தேவ்கலி கிராமம் அருகே நேற்று  பயங்கர சாலை விபத்து நடந்தது. தேசிய நெடுஞ்சாலையில் சசரத்தில் இருந்து வாரணாசி நோக்கிச் சென்ற கார் ஒன்று வேகமாக வந்து இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளானது. அதன்பின், காரும், பைக்கும், மறு பாதையில் தறிகெட்டு ஓடியது. அவர்கள் மீது எதிரே வேகமாக வந்த லாரி மோதியது. இந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். விபத்து நடந்தவுடன், லாரி டிரைவர் சம்பவ இடத்தில் இருந்து தப்பியோடினார்.

 

Tags :

Share via

More stories