"அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது என்பது நான் எடுத்த தனிப்பட்ட முடிவு".

தவெக தலைவர் விஜய் பேச்சில் உடன்பாடில்லை என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். திருச்சி விமானநிலையயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், "அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது என்பதற்காக திமுக மற்றும் கூட்டணிகளிடமிருந்து எந்தவித அழுத்தமும் தரப்படவில்லை. எங்கள் கூட்டணியை உடைக்க நினைப்பவர்களுக்கு வாய்ப்பு தர விரும்பவில்லை. ஆகையால், கூட்டணியின் நலன் கருதி, தொலைநோக்கு பார்வையுடன் நான் எடுத்த தனிப்பட்ட முடிவு" என்று பேட்டியளித்துள்ளார்.
Tags : "அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்க கூடாது என்பது நான் எடுத்த தனிப்பட்ட முடிவு".