ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - அமித் ஷா

by Staff / 01-07-2024 04:05:32pm
ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - அமித் ஷா

எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல. இந்துக்கள் வன்முறையை தூண்டமாண்ட்டார்கள் என்ற ராகுல் காந்தியின் பேச்சுக்கு “வன்முறையை எந்த மதத்துடனும் இணைப்பது தவறு. கோடிக்கணக்கான மக்கள் தங்களை இந்துக்கள் என்று பெருமையுடன் சொல்லிக்கொள்வது ராகுல் காந்திக்கு தெரியாது. ராகுல் காந்தி ஒட்டுமொத்த நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்” என மக்களவையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காட்டமாக கூறியுள்ளார்.

 

Tags :

Share via