குனிந்து வணங்குவது என் இயல்பு - துணை ஜனாதிபதி

by Staff / 08-12-2023 12:31:15pm
குனிந்து வணங்குவது என் இயல்பு - துணை ஜனாதிபதி

துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி முன் கைகூப்பி குனிந்து வணங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் சலசலப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து மாநிலங்களவையில், துணை குடியரசுத் தலைவர் ஜக்தீப் தன்கர் கூறுகையில், இப்போதெல்லாம் நான் எவ்வளவு கும்பிட வேண்டும், யார் முன் பணிந்து வணங்க வேண்டும், எந்தக் கோணத்தில் இருந்து புகைப்படம் எடுக்கிறார்கள் என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டி உள்ளது. கூப்பிய கைகளுடன் குனிந்து வணங்குவது என் இயல்பு. முன்னால் யார் இருக்கிறார்கள் என்று நான் பார்க்கவில்லை என்றார்.

 

Tags :

Share via