ஜனநாயகன் திரைப்பட லிங்கை பகிா்கிறவர்கள் மீது கடுமையான கட்டடம் நடவடிக்கை எடுக்கப்படும் - தயாரிப்பு நிறுவனம்
விஜய் நடித்த கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் தணிக்கை வாரிய சிக்கல்களால் தியேட்டரில் வெளியாகாத நிலையில் தற்பொழுது இணையத்தில் சட்ட விரோதமாக வெளியாகி உள்ளது. தடுக்க வாரியம் மற்றும் நீதிமன்ற வழக்குகளால் ஜனவரி ஒன்பதாம் தேதி வழியாக வேண்டிய இருப்பிடம் தள்ளி போனது. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 10 அன்று படத்தின் முக்கிய காட்சிகள் மற்றும் முழு படமும் இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இப்படம் கசிந்ததற்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது
.படத்தின் அசல் பதிப்பு மார்ச் 17ஆம் தேதியே தயாரிப்பு தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். இப்படத்தை கே. வி. என். ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது, இப்படம் இணையத்தில் கசிந்தது அடுத்து லிங்கை பதுபவர்கள் மீது கடுமையான கட்டடம் நடவடிக்கை எடுக்கப்படும் என தயாரிப்பு நிறுவனம் மற்றும் இயக்குனர் வினோத் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
படம் இணையத்தில் வெளியானதை தொடர்ந்து சுமார் 500 கோடி மதிப்பிலான வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது தயாரிப்பு நிறுவனம் இது குறித்து சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளது.
Tags :



















