கொங்கு மண்டலத்தை தி.மு.கவின் கோட்டையாக மாற்றுவோம்-முதலமைச்சர் மு .க .ஸ்டாலின்
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் கொங்கு மண்டலத்தில் திமுகவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் முதலமைச்சர் மு .க. ஸ்டாலின் தீவிரமாக பேசி வருகிறார் .கடந்த தேர்தல்களை காட்டிலும் இந்த முறை கொங்கு மண்டலத்தில் மிக பெரிய வெற்றியை திமுக பெறும் என்றும் அதிமுகவின் கோட்டை என கருதப்படும் இப்பகுதியை திமுகவின் கோட்டையாக மாற்றுவோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார் ..கொங்கு மண்டலத்தின் தொழில் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு திமுக அரசு முன்னுரிமை அளித்து வருவதாகவும் இதனாலையே மக்கள் திமுக அவை விரும்புவதாகும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் இருந்த நிர்வாக சீர்கேடுகள் மற்றும் ஊழல் போன்ற குற்றங்களை களைவதற்கு திமுக சரியான தேர்வு என்றும் தற்போதைய ஆட்சி மக்களின் உரிமைகளை பாதுகாப்பதில் முதல் இடத்தில் உள்ளது என்றும் அவர் தனது பிரச்சாரத்தின் வலியுறுத்தி வருகிறார் .அதிமுகவை பாஜகவின் அடிமை என்று விமர்சித்துள்ள அவர் தமிழகத்தின் உரிமைகளை மீட்டு எடுக்க கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags :



















