இண்டிகோ விமானங்கள் தொடர்ந்து ரத்து.மற்ற விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள்.மிக அதிக அளவில் உயர்ந்துள்ளன

by Admin / 06-12-2025 12:10:25am
 இண்டிகோ விமானங்கள் தொடர்ந்து ரத்து.மற்ற விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள்.மிக அதிக அளவில் உயர்ந்துள்ளன

விமானப் பணியாளர் பற்றாக்குறை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகளால் இண்டிகோ விமானங்கள் தொடர்ந்து ரத்து செய்யப்படுகின்றன. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணம் திரும்ப அளிக்கப்படும் என இண்டிகோ அறிவித்துள்ளது .அதே சமயம் மற்ற விமான நிறுவனங்களின் கட்டடங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளன .குறிப்பாக, ஏர் இந்தியா போன்ற நிறுவனங்களின் கட்டணங்கள் விண்ணை முட்டுகின்றன இது சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. ஊழியர் பற்றாக்குறை மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பல இந்திய விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன..இண்டிகோ ரத்து காரரணமாக தற்போது இயக்கத்தில் உள்ள மற்ற விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள் குறிப்பாக முக்கிய வழித்தடங்களில் மிக அதிக அளவில் உயர்ந்துள்ளன. பயணிகள் விமான நிலையத்திற்கு செல்வதற்கு முன் தங்கள் பயண நிலையை விமான நிறுவனத்தின் இணையதளத்தில் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.

 இண்டிகோ விமானங்கள் தொடர்ந்து ரத்து.மற்ற விமானங்களின் டிக்கெட் கட்டணங்கள்.மிக அதிக அளவில் உயர்ந்துள்ளன
 
Tags :

Share via