புதுச்சேரியில் டிசம்பர் 9 ஆம் தேதி தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுக்கூட்டம் .
புதுச்சேரியில் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி உப்பளம் துறைமுகம் மைதானத்தில் தமிழக வெற்றி கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு அனுமதி கேட்டு தமிழக வெற்றி கழக கட்சி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் புதுச்சேரி காவல்துறையிடம் மனு செய்திருந்தார். இதனை ஆய்வு செய்த காவல்துறை அதிகாரிகள் அனுமதி வழங்கி உள்ளனர். இதற்கான உத்தரவை புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புசி ஆனந்திடம் வழங்கினார்.ரோடு ஷோவிற்கு அனுமதி மறுத்து பொதுவெளியில் பொதுக்கூட்டத்திற்கு நடத்தகேட்டல் வழங்கப்படும் காவல் துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :


















