"தீவிரவாதிகளை கைது செய்யாதது ஏன்?" - காங்கிரஸ் எம்பி கேள்வி

by Editor / 28-07-2025 05:37:50pm

ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை தொடர்பாக மக்களவையில் சிறப்பு விவாதம் இன்று (ஜூலை 28) நடைபெற்றது. அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி.கெளரவ் கோகோய், "100 நாட்களுக்குப் பிறகும் பஹல்காம் தீவிரவாதிகளை அரசாங்கத்தால் ஏன் பிடிக்க முடியவில்லை?. பயங்கரவாதிகளுக்கு தங்குமிடம் மற்றும் தகவல் கொடுத்தது யார்?. அவர்கள் தப்பிக்க உதவியது யார்?. 100 நாட்கள் ஆகிவிட்டன, ஆனால் இன்னும் இந்த முக்கியமான கேள்விகளுக்கு பதில் இல்லை!" என சரமாரியாக கேள்விகளை அடுக்கினார்.

 

Tags :

Share via