சொத்து தகராறு.. வழக்கறிஞர் வெட்டிக் கொலை
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முருகானந்தம் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். முருகானந்தம் குடும்பத்தில், நீண்ட நாட்களாக சொத்து தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறபடுகிறது. இந்நிலையில், சொத்து பிரச்சனை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக, முருகானந்தம் கொலை செய்யப்பட்ட இடத்தை, தாராபுரம் டிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையிலான போலீசார் ஆய்வு செய்தனர்.
Tags :



















