அவினாசி அருகே 33 மாடுகளுடன் லாரி பறிமுதல்

by Admin / 29-07-2021 03:02:32pm
அவினாசி அருகே 33 மாடுகளுடன் லாரி பறிமுதல்



மாடுகளை சித்ரவதை செய்யும் விதமாக 33 மாடுகளை ஒரே லாரியில் அடைத்து கொண்டு வந்தனர்.திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூர் பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவ்வழியாக லாரி ஒன்று அதிவேகமாக வந்தது. உடனே லாரியை மறித்து போலீசார் சோதனையிட்டனர். அப்போது அதில் மாடுகள் நிரம்பி இருந்தன. மாடுகளை சித்ரவதை செய்யும் விதமாக 33 மாடுகளை ஒரே லாரியில் அடைத்து கொண்டு வந்தனர். மேலும் தஞ்சாவூரிலிருந்து லாரியில் மாடுகளை ஏற்றி கொண்டு பொள்ளாச்சிக்கு சென்று கொண்டிருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
 
தொடர்ந்து நடந்த விசாரணையில் லாரியை ஓட்டிவந்த டிரைவர் திண்டுக்கல்லை சேர்ந்த சின்னசாமி (வயது 50) மற்றும் உடன் இருந்த கிளீனர் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த திருமலைசாமி மகன் சக்திவேல் (45) என்பதும் தெரியவந்தது. போலீசார் 2 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். மேலும் 33 மாடுகளையும், லாரியையும் பறிமுதல் செய்தனர்.

 

Tags :

Share via

More stories