மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நூதன போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாலுகா குலசேகரமங்கலம் அருகில் உள்ள ரெங்கநாதபுரம் ஊரில் சுமார் 30 குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த ஊருக்கு அடிப்படை வசதிகள் தேவையான இடுகாடு மற்றும் ரோடு சீரமைப்பு குடிநீர் வசதி உள்ளிட்ட எதுவும் இல்லாமல் கிராம மக்கள் மழைக் காலங்களில் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர் இதேபோன்று வென்றிலிங்கபுரம் பகுதியில் வசித்து வரும் கிராமமக்களுக்கு இறப்பு காரியங்கள் உள்ளிட்டவைகளுக்கு இடுகாடு உள்ளிட்ட வசதி இல்லாமல் மக்கள் தவித்து வருவதாகவும் இரண்டு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் இன்று தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து இடுகாட்டுக்கு காரியங்கள் செய்வதற்கு செல்வது போன்று கையில் இடுகாட்டில் இறந்தவர் உடலுக்கு எரியுட்ட கொண்டு செல்லப்படும் எரிச்சட்டி மற்றும் சங்கு ஆகியவற்றோடு வந்து ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கு ஊதி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Tags :



















